யாழ்.மாணவர்களிடம் மன்னிப்பு கோரிய டக்ளஸ்!
யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுக்கு 10 நிமிடங்கள் தாமதித்து வந்தமைக்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
நேற்றைய தினம் (30.03.2023) யாழ். மத்திய கல்லூரி தந்தை செல்வா அரங்கில் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாடநூல் வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வுக்கு வருகை தரவிருந்த அமைச்சரை வரவேற்பதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வீதியில் நின்று கொண்டிருந்துள்ளனர்.
தாமதித்து வருகை
எனினும் முழங்காவில் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், பத்து நிமிடங்கள் தாமதமாகக் நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது பிரதம விருந்தினர் உரையை ஆற்றிய டக்ளஸ், தனது வருகைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தாமதித்து வருகை தந்தமைக்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.
உரிய முறையில் பேண வேண்டும்
மேலும், நான் எப்போதும் நேர முகாமைத்துவத்தைச் சரியாகப் பேன வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவன்.
ஆகவே மாணவர்கள் எந்தச் செயற்பாடுகளிலும் நேர முகாமைத்துவத்தை உரிய முறையில்
பேண வேண்டும் என்பதே எனது விருப்பம் எனக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு
குளிர்பானம் வழங்குவதற்குப் பணித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
