இரணைதீவு கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
மன்னார் - பள்ளிமுனையில் இருந்து நேற்று இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவு இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் - பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் 4 மீனவர்கள் நேற்று மாலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள கடற்படையினரின் சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொண்ட நிலையில் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த படகை நிறுத்தி சோதனையிட்டதோடு தேவையற்ற காரணத்தை கூறி குறித்த 4 மீனவர்களையும் சுமார் 3 மணி நேரம் கடலில் தடுத்து வைத்ததாகவும், பின்னர் கடற்படையினர் கொண்டு வந்த தடியினால் மீனவர்களை தாக்கியதோடு, மீனவர்களின் தொலைபேசி மற்றும் மின்விளக்கு போன்றவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பள்ளிமுனை கடற்படை அதிகாரியின்
கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவிக்கப்பட்டுள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan