சுமந்திரன் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு! எழுந்துள்ள புதிய சர்ச்சை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மனைவி ஒரு மதமாற்ற சபையினுடைய செயலாளர் என்று சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனின் பதவியையும் நீக்க தீர்மானம் எடுத்துள்ளமையானது ஒரு கொடுமையான செயற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 52 பேரை சுமந்திரன் மதம் மாற்றுவதற்காக வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறவன்புலவு சச்சிதானந்தன் கூற்றை முற்றுமுழுவதாக ஏற்றுகொள்ளாவிட்டாலும் அண்மைய நாட்களில் இந்த மத மாற்ற விடயங்களின் பின்னணியில் இருப்பதாக தெரிகின்றது.
இந்த விடயம் பாரிய தீப்பிழம்பாக மாறுவதற்குள் இதன் உண்மைதன்மைகள் பற்றி ஆராய வேண்டும் மற்றும் முன்னெச்சரிகையாக இருக்க வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...