நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை போதைப்பொருள் பாவித்த நிலையில் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, நடமாடும் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்த நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் யு. சி. பி. பெரேரா, இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் குறிப்பிட்டார்.
சி.வீ.கே .சிவஞானம்- சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்! மறவன்புலவு சச்சிதானத்தன் காட்டம்
பொதுமக்களின் பாதுகாப்பு
முன்னோடித் திட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 57 பயணிகள் பேருந்து சாரதிகள் இந்த நடமாடும் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 10 சாரதிகள் பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இத்தகைய திடீர் சோதனைகள் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan