எதிர்கட்சிதலைவராக மாறிய நாமல்! பேசுபொருளாகியுள்ள இந்தியரின் பதிவு
இந்தியாவின் குடியரசுத்தின நிகழ்வு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.
அந்தநிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமொன்றின் நிறுவுனர் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டுள்ளமையானது தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இலங்கையின் எதிர்கட்சிதலைவராக சஜித்பிரேமதாஸ இருக்கும் போது நாமல் ராஜபக்சவை எதிர்கட்சிதலைவர் என்று குறிப்பிட்டுள்ளமையானது பேசுபொருளாகியுள்ளது.
டெல்லியில் குடியரசுதின நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்ற நிலையில் ஒடிசாவில் நடைபெறும் குடியரசுத்தின நிகழ்விற்கு நாமல் ராஜபக்ச அழைக்கப்பட்டமையானது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி..
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam