சுதந்திரத் தினத்தன்று மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் பலருக்கு விடுதலை!
சிறைச்சாலைகளில் உள்ள வயது முதிர்ந்தோர், நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்தே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தகவல்களும் தற்போது கோரப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று கைதிகளுக்கு விடுதலை
சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கு
அமைய வயது முதிர்ந்தோர் மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam