நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலரும் பாதிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் நேற்றைய தினம்(25.10.2026) முதல் மழை பெய்து வருகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, நாளைய தினம்(27.10.2026) வரையில் மழை தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
திடீரெனப் பெய்து வரும் மழை காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் வெள்ள நீர் காணப்படுகிறது. அத்துடன் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழையுடன் சேர்த்து பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கரையோரப் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்- தீபன்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று(25.10.2026) தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பாடசாலை மாணவர்களும், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்- தேவந்தன்
மன்னார்
சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூறாய் கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களும்,சீது விநாயகர் குளம் கிராமத்தை சேர்ந்த 21 குடும்பங்கள் உள்ளடங்களாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இலுப்பைக்கடவை பாடசாலை யில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த இரு கிராமங்களுக்குமான பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு,குறித்த இரு கிராமங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவி
மேலும் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளது டன் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் இன்று திங்கட்கிழமை (26) மாலை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாகக் தரப்பால்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாற்று ஒழுங்கு
முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று ஒழுங்குகளும் செய்து வைக்கப்பட்டது.

குறித்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசக்தி உறுப்பினர்களும் சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு உட்பட உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-ஆசிக்








இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri