60 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளுடன் இளைஞர் கைது
மட்டக்களப்பு - செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்குவலை வைத்திருந்த ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(25.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்புக்கு கடற்றொழிலாளர்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு, மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
60 இலட்சம் பெறுமதியான வலைகள் மீட்பு
இதன்போது, செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொழுது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து, சுமாராக 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்கு வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர், நீண்டகாலமாக சட்டவிரோத சுருக்கு வலைகளை பயன்படுத்தி, கடற்றொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சந்தேக நபர் இன்று(26.10.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri