நாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்!
நாட்டில் மூன்று மாவட்டங்களில் 21 கிராம் சேவகர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரித்துள்ளார்.
இரத்னபுரா மாவட்டத்தில் கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளும், இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம நிலதாரி பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த மற்றும் கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்த, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு மற்றும் தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்பிட்டி கிராம சேவர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan