பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகளுக்கு ஏற்பட்ட நிலை! 31 பேர் வரையில் பலி
படகு மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கில் 31 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தை அடைய முயன்றபோது ஆங்கிலக் கால்வாயில் படகு மூழ்கியதில் இவ்வாறு அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் கோப்ரா அவசர குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறைந்தது 30 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தான் ‘அதிர்ச்சியும், திகைப்பும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்ததாக’ பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
சட்ட விரோதமான முறையில் பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இது என்று நம்பப்படுகிறது.
ஏமன், எரித்திரியா, சாட், ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து ஒரு மீட்புக் கப்பல் கலேஸ் துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் சிலரின் உடல்களை கப்பல் ஏற்றி வந்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட பலி எண்ணிக்கை இப்போது 31 ஐ எட்டியுள்ளது.
You My Like This Video
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan