பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியர்கள் பலர்
இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில் வந்த பலர், தாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பிரித்தானியா வந்த அவர்களில் பலர் நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தல்
இந்தியாவில் கடனை வாங்கி முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு வந்த சுமார் 2,500 இந்தியர்கள், பிரித்தானியா வந்தபோது, தங்களுக்கு வேலை தருவதாக கூறிய நிறுவனமே அங்கு இல்லை, தாங்கள் ஒரு மோசடியில் சிக்கி ஏமாந்துள்ளோம் என்பதை அறிந்துகொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் அவர்களில் சிலருக்கு, 60 நாட்களுக்குள் முறையான உரிமம் பெற்ற ஒரு வேலை வழங்குபவரிடம் வேலைக்கு சேருங்கள், இல்லையென்றால் நாடு கடத்தப்படுவீர்கள் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை பேருக்கு, அவர்களுக்கு உரிய வேலை இல்லை.
இந்தியாவிலிருந்து அவர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பிய முகர்வர்களை தொடர்புகொண்ட போது , உங்களை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாகக் கூறினோம், நீங்கள் இப்போது பிரித்தானியாவில் இருக்கிறீர்கள், எங்கள் வேலை முடிந்தது என அவர்கள் கூறியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக, பிரித்தானிய உள்துறைச் செயலர் ஜேம்ஸ் கிளெவர்லியை சந்திக்க, சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புடைய இந்திய அமைப்பொன்று அனுமதி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |