கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட பல பகுதிகள் முடக்கம்
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெட்டபுலா கிராம அலுவலகர் காரியாலயத்தின் கீழ் உள்ள பகுதிகள் இன்று 27.06.2021 காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது கோவிட் தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கெட்டபுலா கிராம பகுதியில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமுலாகியுள்ள முடக்கநிலை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri