இலங்கையர்கள் பெற்றுள்ள தங்க கடன்கள் தொடர்பில் வெளியான தகவல்
இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டின் இறுதியில், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களின் அளவு 52.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகனங்கள் மற்றும் தங்க அடகு பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவன கடன்களின் வளர்ச்சி
கடந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டின் இறுதியில், நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடன்களின் வளர்ச்சி 26.9 சதவீதமாக இருந்துள்ளது.

அதன்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில், வாகனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு 52.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேநேரம், தங்க பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவும் 69.2 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மந்தநிலைக்கு வழிவகுக்கும் கடன்
இதற்கிடையில், இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தின் சரிவு காரணமாக வாகனங்களின் விலை உயர்வு, அத்துடன் இறுக்கமான பணவியல் கொள்கை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை நிதி நிறுவனங்களின் எதிர்கால கடன் விரிவாக்கப்போக்கில் சிறிய மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.