ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை சரிபார்க்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய தணிக்கை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
வாகனங்களின் உண்மை விபரம்
இந்த வாகனங்கள் காணாமல்போயுள்ளதா அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த எழுத்துப்பூர்வ ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த 26 வாகனங்களை சரிபார்க்க குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாக, ஜனாதிபதி செயலகம் 2025, மே 28 அன்று தணிக்கைக்கு தெரிவித்திருந்ததாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நிலவரப்படி, குறிப்பிட்ட வாகனங்கள் உண்மையில் இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri