அநுர தரப்பின் கருத்தினால் அதிருப்தி அடைந்துள்ள மனுஷ!
கேள்விக்குரிய E8 வீசா திட்டத்தைப் பயன்படுத்தி, இலங்கையில் தற்போதுள்ள சட்ட நிபந்தனைகள் மூலம் நாட்டிற்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க தாம் உழைத்ததாக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு வெளிநாட்டு வேலைக்காகவும் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் தம்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது தனது அரசியல் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதகமானது என்றும் மனுஷ கூறியுள்ளார்.
500 மில்லியன் டொலர்
மாதாந்தம் 200 மில்லியன் டொலர்களில் இருந்து 500 மில்லியன் டொலர்களாக வெளிநாட்டுப் பணம் அனுப்பும் நடவடிக்கையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் கொரிய வேலைகளுக்கு தொழிலாளர்களை பரிந்துரைப்பதை அதிகரிக்க பருவகால வேலை வாய்ப்புகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுஷ நாணயக்கார கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சந்தேகத்திற்குரிய E8 வீசா முறையைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தமைக்க குறித்த கடிதத்தை அவர் அனுப்பிவைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
