மைத்திரியை கைது செய்யுங்கள் : மனோ கணேசன் காட்டம்
"முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்ல வளவில் இன்று (23.03.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, "முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார்.
இது ஒரு அதிர்ச்சி செய்தி. நான் அவரின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதுபோல், இத்தனை நாள் ஏன் இந்த தகவலை அவர் மறைத்து வைத்தார் என்ற கேள்விக்கும் பதிலை வாக்குமூலமாக பெற வேண்டும்.
இந்த இரண்டு வாக்குமூலங்களின் அடிப்படையில் உடனடியாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை முடக்கி விட்டு, குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam