அடுத்த நாடாளுமன்றிலேயே தேர்தல் முறைமை சீர்திருத்தம்: மனோவிடம் உறுதியளித்த ரணில் மற்றும் விஜயதாஸ

Mano Ganeshan Ranil Wickremesinghe Sri Lanka
By Harrish Apr 03, 2024 07:28 PM GMT
Report

தேர்தல் முறை சீர்திருத்தம் அடுத்து வரும் நாடாளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து நேற்று (03.04.2024) தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் நிலவிய வெற்றிடங்களுக்கு தீர்வு

சுகாதாரத் துறையில் நிலவிய வெற்றிடங்களுக்கு தீர்வு

தேர்தல் முறை சீர்திருத்தம் 

மேலும் அவர் கூறியதாவது, "தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது.

இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது.

அடுத்த நாடாளுமன்றிலேயே தேர்தல் முறைமை சீர்திருத்தம்: மனோவிடம் உறுதியளித்த ரணில் மற்றும் விஜயதாஸ | Manoganeshan Commenting To Media Today

அன்றைய அமைச்சர், இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தன, தலைமையில் கடைசியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை அரசு காட்ட முயல்கின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம். 

அடுத்த நாடாளுமன்றிலேயே தேர்தல் முறைமை சீர்திருத்தம்: மனோவிடம் உறுதியளித்த ரணில் மற்றும் விஜயதாஸ | Manoganeshan Commenting To Media Today

அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம், சட்டத்தைத் திருத்தி, விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதாகும். அதையும் கூட அரசு செய்யவில்லை.

இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள், பிறகு இப்போது வேண்டாம் என்று இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்தபோது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார்.

அடுத்த நாடாளுமன்றிலேயே தேர்தல் முறைமை சீர்திருத்தம்: மனோவிடம் உறுதியளித்த ரணில் மற்றும் விஜயதாஸ | Manoganeshan Commenting To Media Today

அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவைச் சந்தித்தபோது அவரும் இதையே எனக்குத் தெரிவித்தார். ஆகவே, இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகின்றது.

இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கின்றார்கள்.

எனவே, எமது மக்களைப் பாதிக்கும் எந்தவொரு அடாத்தான, தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம். 

அடுத்த நாடாளுமன்றிலேயே தேர்தல் முறைமை சீர்திருத்தம்: மனோவிடம் உறுதியளித்த ரணில் மற்றும் விஜயதாஸ | Manoganeshan Commenting To Media Today

விகிதாசார முறையை மாற்றாமல் உள்ளக மாற்றங்களைப் பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம். இது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தொன்று தொட்டு வரும் நிலைபாடு ஆகும்.

எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பாடுகள் காணும்போது இதுவும் எமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

400 ரூபா வரை உயர்ந்த டொலர்! குறைந்துள்ள வட்டி வீதம் - அமைச்சர் பந்துலவின் தகவல்

400 ரூபா வரை உயர்ந்த டொலர்! குறைந்துள்ள வட்டி வீதம் - அமைச்சர் பந்துலவின் தகவல்

புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US