சுகாதாரத் துறையில் நிலவிய வெற்றிடங்களுக்கு தீர்வு
சுகாதாரத் துறையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிடங்களாக இருந்த 80 சிரேஸ்ட மருத்துவ நிர்வாகப் பணியிடங்கள் சுகாதார அமைச்சினால் நிரப்பப்பட்டுள்ளதாக மருத்துவர் பி.ஜி.மஹிபால தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லனவும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பட்டியலில் கல்முனையின் எஸ்ஆர் இஸ்ஸதீன், பொலநறுவையின் எஸ் ராஜ்குமார், வவுனியாவின் எஸ் சுபாஸ்கரன், முல்லைத்தீவின் எம்எஸ் உமாசங்கர், கிழக்கு மாகாணத்தின் டிஆர் முரளீஸ்வரன், வவுனியாவின் ஜி சுகுணன், கிளிநொச்சியின் டி வினோதன் மற்றும் மன்னாரின் எம்.எச்.எம் ஆசாத் ஆகிய தமிழ் பேசும் மருத்துவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
