தாய் தமிழகத் தொப்புள் கொடியான் விஜயகாந்த் : இரங்கல் செய்தியில் மனோ தெரிவிப்பு
இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் எம்மை நேசித்த, எமக்காகத் தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உ ரிய வீரத் தமிழனாக எமக்காகக் குரல் எழுப்பிய தாய்த் தமிழகத் தொப்புள் கொடியான் என உணரப்பட்டவர் விஜயகாந்த் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தே.தி.மு.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விஜயகாந்த், தமிழ்நாட்டு திரை வானிலும், பின் அரசியல் வானிலும் சூறாவளியாக எழுந்தார்.
தமிழ் திரையுலகை அணி திரட்டியவர்
இடையில் திடீரென அமைதி தென்றலானார். புரட்சி கலைஞர் என்ற தமிழ் நடிகர், தே.தி.மு.க. தலைவர் என்ற எழுச்சி அரசியல்வாதி என்ற பிரபல அடையாளங்களை மீறி சிறந்த மனிதர் என ஒட்டுமொத்த தமிழுலகில் அவர் அறியப்பட்டார்.
கடல் கடந்து இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காகத் தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உ ரிய வீரத்தமிழனாய் எமக்காகக் குரல் எழுப்பிய தாய்த் தமிழகத் தொப்புள் கொடியான் என உணரப்பட்டவர் விஜயகாந்த். தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழர்களின் அஞ்சலிகளை அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவரது குடும்பத்தாருக்கும், அவரது தே.தி.மு.க. கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
