ஈழத்திற்காக போராடிய கறுப்பு நிலா விஜயகாந்த் : பலரும் அறியாத பல விடயங்கள்

Vijayakanth Tamil nadu
By Vethu Dec 29, 2023 06:00 PM GMT
Report

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

அவரின் மரணம் தமிழகத்தில் மட்டுமன்றி தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது அதீத அன்பு கொண்ட விஜயகாந்த பல்வேறு உதவிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.

1983ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. பல அப்பாவிகள் காடையர்களால் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் போராட்டம்

இதன்போது முதன்முறையாக திரையுலக கலைஞராக விஜயகாந்த் தமிழகத்தில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து தமிழர்கள் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஈழத்திற்காக போராடிய கறுப்பு நிலா விஜயகாந்த் : பலரும் அறியாத பல விடயங்கள் | Tamil Vijayakanth Death Support Eelam Tamils

அதேவேளை, அன்றைய காலகட்டங்களில் ஈழ விடுதலைக்கான போராட்டங்கள் குழுக்கள் பல செயற்பட்டன. அவர்கள் நிதியுதவி வேண்டிச் சென்ற வேளையில் பெருந்தொகை பணத்தை வாரிய வழங்கியதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

1984 ஆண்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை விளக்கி, சென்னை ஆதரவு கோரும் வகையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மறைந்த விஜயந்காந்த பெரும் உதவிகளை புரிந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நிதி உதவி

அன்றைய காலகட்டங்களில் சென்னை வீதிகளில் உண்டியல் குலுக்கினோம். தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள்,வீடுகளில் நிதி சேகரிப்பிலும் போராளிகள் ஈடுபட்டனர்.

ஈழத்திற்காக போராடிய கறுப்பு நிலா விஜயகாந்த் : பலரும் அறியாத பல விடயங்கள் | Tamil Vijayakanth Death Support Eelam Tamils

இந்நிலையில் புரட்சி நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கும் செல்கிறோம். எங்களை அவர் பேசவிடவில்லை. இராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் "ஊமை விழிகள்" திரைப்பட ஒரு காட்சிக்கான வசூல் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் உண்டியல் குலுக்கிய எங்கள் மனங்களில் அந்த மகான் நிறைந்து நின்கின்றார் என தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் நடந்த இனக்கலவரத்தை அடிப்படையாக கொண்டு தமிழர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர் நடித்த படமொன்றில் பாடலை உருவாக்கினார்.

தோல்வி நிலையென நினைத்தால்

மிகவும் வெற்றிகரமாக ஓடிய ஊமை விழிகள் என்ற திரைப்படத்தில் "தோல்வி நிலையென நினைத்தால் " என்ற பாடல் ஈழத்தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பாடல் இப்போதும் தமிழர்களின் வாழ்வியலுடன் ஒன்றிய அடையாளப்பாடலாக மாறியுள்ளது. 


அதேவேளை, ஈழப்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கிய அவர் ஈழம் கிடைக்கும் வரை தான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்ற விஜயகாந்த் முடிவை எடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மீது அதீத அன்பு கொண்ட விஜயகாந்த், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர்வைத்தவர்.

இலங்கையிலிருந்து அகதிகளாக சென்ற ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு மூன்று வேளையும் உணவளித்துள்ளார்.

நடிகர் என்ற நிலை மாறிய அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்ட காலகட்டங்களில், ஈழதமிழர்கள் தொடர்பில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை பகிரங்கமாக கடுமையாக சாடியிருந்தார்.

ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட கருணாநிதி தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US