கூடாரங்களில் தவிக்கவிட்டுள்ள பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் - மனோ கணேசன் குற்றச்சாட்டு

Sri Lanka Upcountry People Mano Ganeshan Sri Lanka Australia Cyclone Ditwah
By Kowshi Jun 21, 2026 12:07 PM GMT
Report

பாதுகாப்பான காணி இல்லை என்ற காரணத்தைக்கூறி, 'டித்வா' பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக அகதிகளை அநுர அரசு இன்னமும் தற்காலிக கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த்துக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவினருக்கும் இடையில் இன்று(21.06.2026) கொழும்பில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக எடுத்துரைத்துள்ளார்.

சிறைக்குள் சலே நடத்தும் அர்த்தமற்ற நாடகம்.. அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சிறைக்குள் சலே நடத்தும் அர்த்தமற்ற நாடகம்.. அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தல் 

டித்வா புனருத்தாரணப் பணிகளுக்காக, இலங்கைக்குப் பாதுகாப்பான நிலத்தைத் தெரிவு செய்வது எப்படி என்ற தொழில்நுட்ப உதவிகளை அவுஸ்திரேலியா அரசு வழங்குவது குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த மனோ கணேசன் எம்.பி. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு  அவுஸ்திரேலியா அரசு வழங்கி வரும் ஆதரவுக்காகத் தூதுக்குழு சார்பாக நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

கூடாரங்களில் தவிக்கவிட்டுள்ள பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் - மனோ கணேசன் குற்றச்சாட்டு | Mano Urges Aussie Envoy On Ditwah Hit Hill People

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கான மீள்குடியேற்றத்துக்குப் பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அனுமதி தாமதமே தற்போதைய பிரதான தடையாகக் காணப்படுகின்றது.

இன்று தமிழர்களுக்கான உரிமைகள் விலை பேசப்படுகின்றன..! இரா.துரைரட்னம் விசனம்

இன்று தமிழர்களுக்கான உரிமைகள் விலை பேசப்படுகின்றன..! இரா.துரைரட்னம் விசனம்

டிஜிட்டல் வரைபடமாக்கல்

டிஜிட்டல் வரைபடமாக்கல் மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவானது, பாதிக்கப்படக்கூடிய எமது மலையகச் சமூகங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த உதவும் மிக முக்கிய பங்களிப்பாகும்.

உங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் வேளைகளில், அவை உண்மையாகவே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்குப் பயன்படுகின்றதா என்பதை அவுஸ்திரேலியத் தரப்பு நேரடியாகக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கூடாரங்களில் தவிக்கவிட்டுள்ள பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் - மனோ கணேசன் குற்றச்சாட்டு | Mano Urges Aussie Envoy On Ditwah Hit Hill People

இந்த விசேட இராஜதந்திரச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக அதன் தலைவர் மனோ கணேசன் எம்.பியுடன், இரத்தினபுரி பிரதேச சபையின் உப தவிசாளரும் ஜ.ம.முவின் சிரேஷ்ட உப தலைவருமான சந்திரகுமார், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன், அவுஸ்திரேலியத் தரப்பில் உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், துணைத் தூதுவர் ரூத் பைர்ட் மற்றும் அரசியல் அதிகாரி மெத்யூ லார்ட் ஆகிய முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று 07 என்புக் கூடுகள் அடையாளம் - செம்மணியில் அகழ்வு 405 ஆக உயர்வு

இன்று 07 என்புக் கூடுகள் அடையாளம் - செம்மணியில் அகழ்வு 405 ஆக உயர்வு

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US