பட்டப்பகலில் மயானத்தில் நடத்திய அமானுஷ்ய பலி பூஜையினால் ஏற்பட்ட பரபரப்பு
பொலன்னறுவை - பகமூன பகுதியில் உள்ள ஒரு மயானத்தில், கல்லறைக்கல்லில் பலி சடங்குகளை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்கள் மனித உருவங்களை ஒத்த களிமண் உருவங்களைக் கொண்டு கல்லறைக்கல்லில் விளக்கேற்றி வந்ததையடுத்து, கிராம மக்கள் பொலிஸாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பெண்களும் கைது
இதனையடுத்து அங்கு விநை்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அந்த இரண்டு பெண்களும் கல்லறைக்கல்லைச் சேதப்படுத்தி, குழிகளை தோண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது பலி சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகத்திற்குரிய அந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர் பொலன்னறுவை, ஹிங்குரகொடவைச் சேர்ந்த 49 வயது பெண் என்றும், மற்றொருவர் பகமூனவை சேர்ந்த 38 வயது பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தில் வசிப்பதற்கு அஞ்சும் மக்கள்
கல்லறைக்கல்லை சேதப்படுத்திய குற்றத்திற்காகவும், தனியார் மற்றும் பொது மயானங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இரு பெண்களும் இதற்கு முன்னரும் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் கிராமத்தில் வசிப்பதற்கே அஞ்சுவதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri
முதல் நாளிலேயே நல்ல வசூல் வேட்டை செய்துள்ள விஜய் ஆண்டனியின் நூறு சாமி திரைப்படம்... கலெக்ஷன் விவரம் இதோ Cineulagam