அநுரவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள் - மனோ எம்.பி. பகிரங்க வேண்டுகோள்

Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka Mano Ganeshan
By Rakesh Oct 10, 2026 12:11 PM GMT
Report

நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருக்கும் இனவாதத்தைத் தூண்டிவிடுவதில், அரசுக்கு ஆதரவாகஎழுதுகின்றோம் என நினைத்து, தமிழ் மொழியில் பொதுவெளியில் எழுதும் எழுத்தாளர்கள், பேசும் பேச்சாளர்கள், அதை அப்படியே கொண்டு செல்லும் யூ-டியூப் ஊடகர்கள், இன்று நாட்டிலே கொஞ்சம் வித்தியாசமாக ஆட்சி செய்ய முயலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை அவஸ்தைக்கு உள்ளாக்குகின்றார்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இவர்கள் பொறுப்பற்றத்தனமாகப் பொதுவெளியில் வந்து போடும் கோஷம், “ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்” (ஏ.ஐ.) மூலம் உடனடியாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்களப் பொதுவெளிகளில் உலாவிடப்படுகின்றன. அவை “சிங்கள - பௌத்த மத அரசியல்” மீண்டும் தலைதூக்கக் காரணங்களாக அமைகின்றன. ஆகவே, “அந்தாளை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கப்பா!” என எதிர்க்கட்சியில் இருந்தே நான் சொல்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் செய்தி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

ஞானசாரரின் சீருடை

அதில் மேலும், இப்போது யாரும், குற்றம் புரிந்த ஞானசாரரைச் சிறையில் போட்டது தவறு எனச் சொல்லவில்லை. அவரது சீருடைதான் பிரச்சினை. அதை ஜனாதிபதி அநுர தீர்க்கட்டும். இப்போது, ஜனாதிபதி உடனடியாக ஞானசாரரின் சீருடை தொடர்பில் பௌத்த தலைமைகளைக் கண்டு பேசி, இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக உறுதி அளித்துள்ளார். இது அவர் மீதான பௌத்த மதத் தலைமைகளின் அழுத்தம்.

அநுரவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள் - மனோ எம்.பி. பகிரங்க வேண்டுகோள் | Mano Makes A Appeal To Tamil Media And Writers

அதற்கு அவர் பதில் கூறியுள்ளார். நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இனவாதம் முழுமையாக மாறக் காலம் எடுக்கும். அதைத் தற்காலிகமாகத் தரைக்கு அடியில் போட்டது, அரகலய என்ற கிளர்ச்சியாகும். இது தொடர்பில், சமூக ஊடகங்களில் கூவித் திரியும், தமிழ் பேசும் எழுத்தாளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் கூறுகின்றேன்.

பௌத்த மதத் தேரர்கள் தொடர்பில், ஜனாதிபதி அநுரவுக்கு உதவி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், மீண்டும் மத அரசியல் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்றால், தயவு செய்து அமைதியாக இருங்கள்.

சிங்கள - பௌத்த மத அரசியல் 

நீங்கள் பொது வெளியில் வந்து போடும் அரோகரா அல்லது சபாஷ் அல்லது ஜயமேவா கோஷங்கள் எல்லாம், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மூலம் உடன் இன்ஸ்டன்ட்டாக சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்களப் பொதுவெளிகளில் உலாவிடப்பட்டு, சிங்கள - பௌத்த மத அரசியல் மீண்டும் தலைதூக்கக் காரணங்களாக அமைகின்றன.

ஆகவே, தமிழ் பேசும் மக்கள், இது பற்றி அதிகம் பேசாமல், அதே மாதிரி நமது பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுங்கள் ஜனாதிபதி!, என கோரிக்கை விடுத்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். அதாவது, ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட வேண்டும் என எதிர்க்கட்சியில் இருந்து நானே சொல்கின்றேன் என தெரிவித்துள்ளார். 

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US