குறிவைக்கப்படும் மன்னார்! திரைமறைவில் நடக்கும் சதி
மன்னார் காற்றாலை திட்ட விவகாரம் இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதுமட்டுமன்றி மன்னாரில் செரிந்து காணப்படுகின்ற மணல் படிவுகளை அகழ்ந்தெடுப்பது, காற்றாலை உற்பத்தி திட்டம், கடற்படுக்கைகளில் காணப்படும் பெட்ரோலிய வளங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட ணே்டிய தேவையுள்ளது.
வடக்கிலே காணப்படுகின்ற வளங்களில் மன்னாரிலே அதிகளவான செரிவான மணல்படிவுகள் உள்ள இடமாக உள்ளது.இதனாலே இந்த பகுதி அதிகமாக குறிவைக்கப்படுகின்றது.
சீனாவினுடைய ஆதிக்கம் இலங்கையில் அதிகமாக இருப்பதால் இது அண்டைய நாடான இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே மன்னாரில் இந்தியா காலூன்றுமாக இருந்தால் சீனாவிற்கு எதிர்வினையாக அமையும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக அமைகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி........




