மன்னார் காற்றாலை திட்டத்தால் இடம்பெயரும் பறவைகளுக்கு ஆபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்
மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின் திட்டம், இடம்பெயரும் பறவையினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு திட்டம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு திட்டத்தின் உறுப்பினர் சஜீவ சாமிக்கர தெரிவிக்கையில்,
“மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின் திட்டத்தில் மன்னார் தீவின் தெற்குக் கரை பகுதி இடம்பெயரும் பறவைகள் வரும் வழித்தடங்கள் ஆகும்.
பிழையான கருத்தியல்
ஆனால், ஒரு பறவையை கூட காணவில்லை என மின்சக்தி அமைச்சர் கூறுகின்றார். அவருக்கு தெரியாவிட்டால் அது தொடர்பில் இருக்கும் நிபுணர்களுடன் கலந்துரையாடியிருக்கலாம்.
பொருளியலாளர் ஒருவருக்கு சூழலியல் தொடர்பில் தெளிவற்றிருக்கலாம். அதற்கான சூழலியலாளர்களுடன் கேட்டு அறிந்திருக்கலாம்.
அமைச்சரின் கூற்று சமூகத்தில் பிழையான கருத்தியலை உருவாக்கலாம். குறித்த காற்றலை அமைக்கப்படும் தொகுதி பெருமளவிலான பறவையினங்கள் வருவதை முற்றாக தடுத்து விடும். இது பாரிய சூழலியல் பாதிப்பாகும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
