மன்னார் காற்றாலை விவகாரம்.. போராட்டக்காரர்களை தாக்கியமைக்கு கஜேந்திரகுமார் கண்டனம்
மன்னாரில் அமைதி வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை அரசின் பொலிஸார் தாக்கியுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராக நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர், கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், "மன்னார் காற்றாலை மின் திட்டத்தினை அரசு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.
குறித்த காற்றாலை மின் உற்பத்தியானால் மன்னார் பாரியளவில் பாதிப்படையவுள்ளதாக சிவில் சமூக அமைப்புக்கள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த்து வருகின்றனர்.
அரசாங்கத்தின் பணிப்புரை
குறித்த மின்காற்றாலை மற்றும் மண் அகழ்வு தொடர்பில் நாடாளுமன்றிற்கு விஜயம் செய்தருந்த மன்னார் சிவில் சமூக அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டதாவது. இத் திட்டம் தொடர்பில் மன்னார் மக்களுடன் பேசியே ஒரு முடிவுக்கு வருவோம் என அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் அரசின் முக்கிய செயலாளர் ஒருவர் மன்னார் திட்டத்தை முன்னெடுக்க எந்தவிதமான தடைகளும் இல்லை திட்டத்தை முன்னெடுக்குமாறு பணித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் மன்னாரில் அமைதி வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை அரசின் பொலிஸார் தாக்கியுள்ளனர். இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராக நாம் வன்மையாக கண்டிக்கிறோம்“ என குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri