மன்னாரில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட அதி சொகுசு பேருந்து சேவை
மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாரிற்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்து சேவையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் ஏற்பாடு செய்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறு கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருவதற்கு அல்லது மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதற்கு சராசரியாக 70 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது.
ஆனால் இனி வரும் காலங்களில் எவ்வளவு தொகை ஒரு தனி நபருக்கு செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் சொகுசு பேருந்து முகாமையாளர் இடம் தொடர்பு கொண்டு இவ்வாறு வெளிநாடு செல்பவர்களுக்கு அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருவதற்கு அதி சொகுசு பேருந்து சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
சேவை நாட்கள்
அந்த வகையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் மன்னாரிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செல்பவர்கள் 0774902440 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு ஆசனங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
அண்மைக்காலமாக மன்னாரில் இருந்து கொழும்புக்கு 1 லட்சம் ரூபாவும்,பேசாலையில்
இருந்து கொழும்பிற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் கூலியாக
அறவிடபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.





அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
