பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் கோரிக்கையில் கையெழுத்திட்ட, கவிஞர் ஜசீம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 18 மாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீம் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் கோரிக்கையில் கைச்சாத்திட்டார்.
மன்னாரில் வைத்து அவர் இந்த கோரிக்கையில் கைச்சாத்திட்டார்.
இந்த கோரிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் மன்னாரில் நடத்தப்பட்டபோது, ஜசீமும் அவரது குடும்பத்தினரும் அதில் கையெழுத்திட்டனர்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
25வயதான கவிஞர் ஜசீம், இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில 2020 மே 16ம் திகதியன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan