மன்னாரில் சற்றுமுன் பதற்றம்! மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய பொலிஸார்
மன்னார் பசார் பகுதியில் சற்றுமுன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மன்னாரில் 2ஆம் கட்ட காற்றாலை மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றிவருகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியபடுத்தி வருகின்றனர்.
எதிர்ப்பு நிலை
இன்று(12) 10வது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதோடு மன்னார் நுழைவாயில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மன்னார் மாவட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள் எதிர்ப்பு நிலையை உண்டாக்கியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள், பொது அமைப்புக்கள், பிரஜைகள் குழுக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மின்கோபுர திட்டத்திற்கான பொருட்களை மன்னார் நகரிற்குள் கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதால் தற்போது இங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அச்சுறுத்திய பொலிஸார்
அங்கு 100ற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டதோடு சக பொலிஸாரை வைத்து அனைவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பினை மீறி பொலிஸாரின் உதவியுடன் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதார் மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.








