மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

Mannar SL Protest Charles Nirmalanathan
By Ashik Jan 26, 2024 09:49 AM GMT
Report

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (26.01.2024) காலை 10 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான முக்கிய காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான முக்கிய காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

காணி விடுவிப்பு

மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் மத்திய பகுதியை சென்றடைந்தது.

பின்னர் மன்னார் மாவட்டச் செயலகம் முன் ஒன்று கூடிய மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை முன் வைத்தனர். 

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Mannar People S Vigilance Movement

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் கையளிப்பதோடு பொதுவான காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

அத்தோடு அவர்களின் அமைதியான வாழ்விற்கு வழி வகுத்தல், பல அரச காணிகள் தவறான செயற்பாடுகளினால் மக்களின் வளர்ச்சியினை பாதிக்க கூடியதாக ஒரு சிலர் தமதாக்கி உள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.

லண்டனில் பண மோசடியில் கைதான இலங்கைத் தமிழர் : செய்திகளின் தொகுப்பு

லண்டனில் பண மோசடியில் கைதான இலங்கைத் தமிழர் : செய்திகளின் தொகுப்பு


கனிய மணல் அகழ்வு

மேலும், வேறு மாவட்ட அரசியல் வாதிகள் மற்றும் அரசியல் முகவர்கள் மன்னாரில் உள்ள மக்களினதும், பொதுக் காணிகளையும் வாங்கி தமதாக்கிக் கொள்கின்றனர்.

இதனால் வருங் காலத்தில் மக்களுக்கும்,அவர்களுடைய சந்ததியினருக்கும் ஏற்படவிருக்கும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பாக தலைமன்னார் துறை காணி, நாயாற்றுவெளி காணி, பேசாலை பகுதிகளில் குறித்த பிரச்சினை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Mannar People S Vigilance Movement

அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய காணிகள் அபகரிக்கப்பட்டு சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுவதால் இதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மன்னார் தீவில் அரச மற்றும் தனிப்பட்ட முகவர்களால் 4,500க்கு மேல் துளைகள் 50 அடிக்கு கீழ் இடப்பட்டு கனிய மணல் அகழ்வு இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதில் எடுக்கப்பட்ட மண்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் மன்னார் தீவில் அனைத்து பிரதேசங்களிலும் கனிய மணல் அகழ்வு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கனிய மண் அகழ்வினால் நிலமேற்பரப்பு மிகவும் இறுகமற்று போகிறது. தொடர் நடவடிக்கைக்காக இக் கனிய மண் ஆய்வு செய்ய அவுஸ்திரேலியாவிலுள்ள தனிப்பட்ட கம்பனிகளுக்கு இம்மண்ணை விற்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

சகோதரி பவதாரணியின் உடலைப்பார்க்க கொழும்பிற்கு வந்த யுவன்

சகோதரி பவதாரணியின் உடலைப்பார்க்க கொழும்பிற்கு வந்த யுவன்


குடி நீர் பாதிப்பு

தற்போது மன்னார் தீவின் 63 சதவீத நிலப்பரப்புகள் கடல் மட்டத்தின் கீழ் உள்ளது. இக்கனிய மண் அகழ்வு தொடருமானால் காலநிலை காரணமாக மன்னார் தீவு முற்று முழுதாக நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதால் இந்த கனிய மணல் அகழ்வு உடன் தடைசெய்யப்பட வேண்டும். 

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Mannar People S Vigilance Movement

இந்த நடவடிக்கையினால் மன்னார் தீவில் உள்ள இயற்கை குடி நீர் முற்றாக பாதிக்கப்படுவதுடன் மன்னார் தீவினுள் காணப்படும் பனை, தென்னை போன்ற பயன் தரும் மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் தீவினுள் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே இச் செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Mannar People S Vigilance Movement

மேலும், மன்னார் தீவினுள் இதுவரை 36 இற்கு மேற்பட்ட உயர் மின் வலு காற்றாடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்தும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் 100 இற்கும் மேற்பட்ட உயர்மின் வலுக் காற்றாடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மன்னார் தீவை உயர் மின் வலுக்காற்றாடிகளின் பண்ணையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்

மின்வலு காற்றாடி

அத்துடன் ஒரு மின்வலு காற்றாடிக்கு 6.5 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக்கவும் விசேட சட்ட மூலம் இந்த நிலங்களை அரசுடமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இந்நிலங்கள் சுவீகரிக்க படுவதனால் மன்னார் தீவினுள் வசிக்கும் மக்களின் இருப்பு நிலம் கேள்விக்குறியாகிவிடும். அத்தோடு மக்கள் பலவந்தமாக இடம்பெயர்வு செய்யப்படும் நிலை உருவாகலாம்.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Mannar People S Vigilance Movement

30 வருடங்களுக்கு மேலாக இம்மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு யாவற்றையும் இழந்து சீவிப்பதற்கு கஷ்டப்படும் நிலையில் செயற்திட்டங்கள் நடைபெறுமானால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பு நிலை ஏற்பட்டு இம்மக்கள் மன்னார் தீவை விட்டு வெளியேறும் ஒரு துர்பாக்கிய நிலை ஏற்படும். எனவே அதை நிறுத்தி மன்னார் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

எனவே மன்னார் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை தயவு கூர்ந்து கவனித்து எங்களின் நிலம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Mannar People S Vigilance Movement

போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு சென்றடையும் வகையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மாவட்டச் செயலகத்திற்கு சென்றுகோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பேரணியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம் : இசை நிகழ்ச்சியில் மாற்றம்

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம் : இசை நிகழ்ச்சியில் மாற்றம்

புத்தளத்தில் சனத் நிசாந்த ஓய்வெடுக்காமைக்கான காரணம்: அமைச்சர் பிரசன்னவின் தகவல்

புத்தளத்தில் சனத் நிசாந்த ஓய்வெடுக்காமைக்கான காரணம்: அமைச்சர் பிரசன்னவின் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, முல்லைத்தீவு

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US