மன்னார் இரட்டை படுகொலை விவகாரம்!நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் - நொச்சிக்குளம் இரட்டை படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 20 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த 20 சந்தேகநபர்களும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்று பொருட்களான இரத்த மாதிரி, இரண்டு கோடாரிகளையும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பவும் மன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படும் சான்று பொருட்கள்
இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமித்து,குறித்த சான்று பொருட்களையும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் 20 பேரையும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் பிறப்பித்த உத்தரவு
கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் உயிலங்குளம்,மற்றும் தலை மன்னார் பொலிஸ்
உத்தியோகத்தர்கள், மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வந்தமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
