மன்னார் நொச்சிக்குளம் இரட்டை கொலை : மேலும் 6 சந்தேக நபர்கள் கைது
மன்னார் - நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.

நீதவான் பிறப்பித்த உத்தரவு
இவ் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் இன்று (22) புதன்கிழமை காலை மன்னார் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-06-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (22) உத்தரவிட்டார்.
இதுவரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri