மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு மரதன் ஓட்டப் போட்டி
வருடாந்தம் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்' எனும் விழிப்பணர்வு மரதன் ஓட்டப் போட்டி மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் அனுமதியுடன் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி தலைமையில் இன்று (25) காலை 6.50 மணியளவில் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது.
போட்டியாளர்கள்
இதன் போது விருந்தினராக வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டிலிசன் பயஸ் ,வைத்தியர் ஜோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் போட்டியாளர்கள் 36 பேர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் போட்டியில் முதல் 10 இடங்களை பெற்ற வீரர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.