மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா நேற்று 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.
நேற்று (6) மாலை 5.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கொடியேற்றப்பட்டது.
கொடியேற்றத்துடன் ஆரம்பம்
இதன் போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும் மறைமாவட்ட குருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து நவநாள் திருப்பலி இடம் பெற்றது.

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்தில் கூடி வருகின்றனர்.
இன்றைய தினம் வியாழக்கிழமை (6) கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் தொடர்ந்து இடம்பெற்று நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.



