மன்னார் மக்கள் மடையர்கள் அல்ல! போராட்டக்களத்தில் முளைந்த பாடல்..
மன்னாரில் காற்றாலைத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
தற்போது ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஒருமாதகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மன்னாரிலுள்ள இளைஞர்கள் எழுதிய “கருநிலம்” என்ற பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.
“நாங்கள் இந்த திட்டத்தை வேண்டாமென்று கூறவில்லை, இந்த இடத்தில் வேண்டாமென்று கூறுகின்றோம்.
மன்னார் மக்கள் மடையர்கள் அல்ல.. சிலருடைய அரசியல் அபிலாசைகளுக்காக அந்த நிலத்தையே நம்பியிருக்கும் மக்களை பலியாக்குவது நியாயமில்லை” என்று குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...




