மன்னாரில் 3000 குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டம் (VIDEO)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு “செமட்ட செவன” மாதிரி செயற்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் பெருமளவு மக்கள் முழுமையாக கடனாளியாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று(23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர்.
வீடு அமைப்புத்திட்டம்
மேலும் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய குடும்பங்களை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து 5 லட்சம் மற்றும் 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்கான செயற்பாடுகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபை முன்னெடுத்தது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தங்கள் தற்காலிகமாக வசித்து வந்த குடிசை வீடுகளையும் உடைத்து புதிய வீடு கட்டுமானப்பணியில் ஈடுபட்டோம்.
மக்களின் கோரிக்கைகள்
ஆனால் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வீட்டுதிட்டம் முடிவடையாத நிலையில் கடனாளிகளாக கடன் சுமையுடன் வாழ்ந்து வருகின்றோம்.
மேலும் இதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எங்களுக்காக சிறிய வீடு ஒன்றாவதும் அமைத்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருப்பினும்
குறித்த விடயம் தொடர்பாக கேள்விகள் எழுப்புவதற்கு யாரும் இல்லை” என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




