மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு
மன்னார் (Mannar) நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் (29) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று (29.08.2024) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளும் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளன.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
மேலும், இதன்போது சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை, நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் எவ்வித வழக்கு விசாணைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி, மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (30) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதோடு ஊடக சந்திப்பும் நடத்தப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
