உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட அறிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் அடிப்படை உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஆணையகம், தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனநாயக உரிமையான வாக்களிப்பு
குறித்த அறிக்கையானது நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, இலங்கை மக்கள் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை உறுதிப்படுத்தும் செயற்பாட்டை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடயத்தில் அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |