மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி
ஜெனிவாவின் (Geneva) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், செப்டெம்பர் மாத அமர்வின் ஆரம்ப நாளிலேயே விவாதிக்கப்படவுள்ளது.
இதன்படி இலங்கை தொடர்பான விவாதம், செப்டெம்பர் 9 ஆம் திகதி, பேரவையின் 57 வது அமர்வின் ஆரம்ப நாளிலேயே இடம்பெறவுள்ளது.
இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
விரிவான அறிக்கை
இந்நிலையில், ஆராய்வின் பின்னர் அறிக்கை மீது ஊடாடும் உரையாடல் நடத்தப்படவுள்ளது.
பேரவையின் 51-1 தீர்மானத்தின்படி, இலங்கை தொடர்பான தகவல்களை சேகரிக்கும் திறனை ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் உட்பட விடயங்களை ஆராயுமாறு மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.
இந்தநிலையில் 57வது அமர்வில், ஒரு ஊடாடும் உரையாடலின் பின்னணியில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டு,பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை மனித உரிமைகள் பேரவை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
