ஜனாதிபதியை ஆதரிப்பதாக காலைவாரிய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Sajith Premadasa Government Employee Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Diasa Sep 17, 2024 08:32 AM GMT
Report

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு தற்போது காலை வாரிவிட்டதாக முன்னாள் வாழைச்சேனை காகித ஆலை தவிசாளர் மங்கள சேனரத் தெரிவித்துள்ளார்.

கறுவாக்கேணி - வாழைச்சேனையில் அமைந்துள்ள சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 

"பல்வேறுபட்ட அரசியல் சார்சையில் மாட்டிக்கொண்டு மாணவர்களின் கற்றலுக்கு பயன்படாது நீண்டகாலமாக மூடிக்கிடந்த புணானை எஸ்.எல்.ரி பல்கலைக்கழகத்தினை எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அவரது நிலைமை அறிந்து மற்றும் மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி கருதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து அதன் நிர்வாகத்திடம் அண்மையில் கையளித்தார்.

தேசியம் கட்டிக்காத்த உணர்வுகளை குழி தோண்டி புதைக்கும் தமிழரசுக் கட்சி: மணிவண்ணன் குற்றச்சாட்டு

தேசியம் கட்டிக்காத்த உணர்வுகளை குழி தோண்டி புதைக்கும் தமிழரசுக் கட்சி: மணிவண்ணன் குற்றச்சாட்டு

சஜித்துக்கு ஆதரவு 

அதற்கு நன்றி கடனாக தான் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருப்பதாகவும் எதிர்கால தேர்தல் நடவடிக்கையின் போது ஜனாதிபதிக்கு நன்றி விசுவாசத்துடன் செயற்படப் போவதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அந்நிலை மறந்து சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டு வருகின்றார். இது அவரது நன்றி மறந்த செயலாகவே நான் கருதுகிறேன்.

ஜனாதிபதியை ஆதரிப்பதாக காலைவாரிய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Mangala Senarath Blames Ex Governor Eastern

ஏனென்றால், இப்பல்கலைக் கழகத்தை திறப்பதற்கு உள்ள தடைகள் தொடர்பாக முன் நின்று செயற்பட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி செயற்பட்டவர்களில் நானும் ஒருவனாகும். அதனாலேயே நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து விடயங்களும் நன்கு எனக்கு தெரியும் என்றார்.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையில் அவர் அமைதி காத்திருக்க வேண்டும். சஜித் பிரேமதாசவோ அல்லது ரவுப் ஹக்கிமோ அவருக்கு இது தொடர்பாக எதுவித உதவியும் செய்யவில்லை.

நான் அவருடன் கூட இருந்து இவ்வுதவியை ஜனாதிபதி மூலமாக செய்து கொடுத்தேன். ஆகவே, தான் இவ்விடயத்தை பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறேன். 

2005இல் இருந்து எனக்கும் அவருக்கும் அரசியல் தொடர்பு உள்ளது, அதன் மூலமாகவே அவரை எனக்கு நன்கு தெரியும். குறித்த விடயம் தொடர்பாக என்னுடன் பேசினார்.

திடீரென காணாமல்போயுள்ள அரச வாகனங்கள்: தீவிரமடையும் விசாரணைகள்

திடீரென காணாமல்போயுள்ள அரச வாகனங்கள்: தீவிரமடையும் விசாரணைகள்

அரசியல் தொடர்பு 

தான் பல்வேறு பட்ட அமைச்சு பதவிகள் மற்றும் ஆளுநராக இருந்தும் என்னால் இப்பல்கலைக்கழகத்தை நடாத்த முடியாத இக்கட்டான சூழ் நிலையில் இருக்கிறேன் என கவலையுடன் அப்போது என்னிடம் கூறினார்.

ஜனாதிபதியை ஆதரிப்பதாக காலைவாரிய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Mangala Senarath Blames Ex Governor Eastern

இதனை நிறைவேற்றிக் கொடுத்ததன் பின்னர் நன்றி மறந்து விட்டார். ஜனாதிபதி அவருடன் பேசுவதற்கு தொடர்பு கொண்ட போதிலும் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இது ஒரு நல்ல செயலாக அவர் கருதுகிறாரா? ஜனாதிபதி அவரது கையால் பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கூறி அவராலேயே அதன் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் திறக்கப்படும் வரை அவர் எம்முடன் இருந்தார். முன்பெல்லாம் அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுப்பார்.

அன்பாக சுகம் விசாரிப்பார். பின்னர் அவரது தொடர்பு படிப்படியாக குறைந்தது. நெருக்கத்தை விலக்கிக் கொண்டு தோற்றத்தையும் மாற்றி பச்சோந்தி தனமாக செயல்படுகிறார். இவர் இவ்வாறு நடந்து கொண்ட விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

தேர்தல் கால விடுமுறை தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை

தேர்தல் கால விடுமுறை தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US