மங்கள சமரவீரவின் எதிர்வுகூறலை நினைவூட்டிய தலதா அத்துகோரள
நிதி முகாமைத்துவத்தை சரியாக செய்தால், நாடு என்ற வகையில் முன்நோக்கி செல்ல முடியும் எனவும் இல்லை என்றால், 2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து அடையும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்கூட்டியே தெரிவித்திருந்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மங்களவை கேலிக்கு கிண்டலுக்கு உள்ளாக்கினர்
அன்று நிதியமைச்சராக மங்கள சமரவீர விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்திய போது பலர் அவரை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கினர். மங்கள சமரவீர மிகவும் தூரம் நோக்கம் கொண்டே தீர்மானங்களை எடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த நடவடிக்கைகள் காரணமாக நாடு தற்போது வங்குரோத்து நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இலவச கல்வி கனவாக மாறியுள்ளது
இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகியவற்றை தனியார்மயப்படுத்தும் திட்டம் ஜனாதிபதிக்கு இருக்கின்றதோ தெரியவில்லை. அப்படியான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சாதாரண வாழ்க்கை வாழும் மக்களுக்கு தற்போது இலவச கல்வி கனவாக மாறியுள்ளது. வைத்தியசாலைக்கு சென்றால், மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
இப்படியான நிலைமையில் இலவச கல்வி மற்றும் சுகாதாரம் பற்றி பே முடியுமா எனவும் தலதா அத்துகோரள கேள்வி எழுப்பியுள்ளார்.