யாழில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல்
வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த ஒன்றுகூடலானது, யாழ்ப்பாணம் கண்டி வீதியில் உள்ள திருமறைக்கலாம் மன்ற மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பும் நோக்கில், வடமாகாண ஆளுநரிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளர்கள் கருத்து
அதற்கு அமைவாக இச்செயல் திட்டத்தை விரைவாக முன்னெடுக்கும் நோக்கிலும், ஜனாதிபதியை நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்பை ஆளுநர் பெற்றுத்தர உறுதி கூறியமையாலும் நமது ஏற்பாடுகளை விரைவாக முன்னெடுக்க வேண்டிய கடமை எங்களிடம் உள்ளது.
அதனால்
முக்கிய தீர்மானங்களை திட்டமிடுவதற்காக வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஆகிய
உங்களை, தவறாது கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |