உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு எலான் மஸ்க் வாழ்த்து
இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு (Gukesh Dommaraju) உலகின் மிகப்பாரிய பணக்காரரும், டெஸ்லா முதலாளியுமான எலான் மஸ்க் (Elon Musk) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்தினை அவர் தனது எக்ஸ் தளத்தினூடாக கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ( Singapore) நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் தொடரில் சீனாவின் (China) டிங் லிரெனை தோற்கடித்து குகேஷ் உலக சாம்பியன் ஆனார்.
வாழ்த்து
இந்தநிலையில் ,சினிமா, அரசியல், விளையாட்டு என அனைத்து துறைகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குகேஷிற்கு குவிந்து வருகின்றன.
18th @ 18! pic.twitter.com/krXbIfewo0
— Gukesh D (@DGukesh) December 13, 2024
இதனையடுத்து, எலான் மஸ்க்கும் குகேஷுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |