2054 இல் 20க்கு 20 கிரிக்கட் உலக கிண்ணத்தை வெல்லப்போகும் இலங்கை அணி
2054 ஆம் ஆண்டு இலங்கை அணியும் உலக கிண்ணத்தை வெற்றிகொள்ளும் என்று ஆர்ட்டிபிசல் இன்டலிஜன்ட் என்ற ஏ.ஐ கணித்துள்ளது.
இந்த கணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மீண்டும் டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக மாறுவதற்கு, 20க்கு20 போட்டிகள் முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.
ஐரோப்பிய நாடு
கால்பந்தை போல் கிரிக்கெட்டும் குறுகிய நேரத்தில் முடிவடைவதால் பல ஐரோப்பிய நாடுகளும் தற்போது, 20க்கு20 போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு, 20க்கு 20 உலக கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நடைபெறும் தொடர்களில் எந்த அணி, 20க்கு 20 உலகக்கிண்ணத்தை வெல்லப்போகின்றன என்பதை ஆர்ட்டிபிசல் இன்டலிஜன்ட் என்ற ஏ.ஐ கணித்துள்ளது.
இந்த கணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மீண்டும் டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியும் 2030 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியும் 20க்கு20 உலகக் கிண்ணத்தை வெல்லும் என ஏ. ஐ குறிப்பிட்டுள்ளது.
2034 ஆம் ஆண்டு இங்கிலாந்து
மீண்டும் 2032 ஆம் ஆண்டு இந்தியாவும், 2034 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் உலக கிண்ணத்தை வெல்லும் என ஏஐ கூறியுள்ளது.
2036 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் 2038 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவும் 2040 ஆம் ஆண்டு பாகிஸ்தானும் 20க்கு20 உலக கிண்ணத்தை வெல்லும் என ஏ. ஐ கணித்துள்ளது.
2042 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியும், 2044 நியூசிலாந்து அணியும், 2046 அவுஸ்திரேலியா அணியும் 20க்கு20 உலக கிண்ணத்தை வெற்றி கொள்ளவுள்ளதாக ஏ ஐ குறிப்பிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 2048 மற்றும் 2050 என தொடர்ந்து இரண்டு உலக கிண்ணங்களையும் இந்தியா வெல்லும் என கணித்துள்ள ஏ.ஐ 2052 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியும் 2054 ஆம் ஆண்டு இலங்கை அணியும் உலக கிண்ணத்தை வெற்றிகொள்ளும் என்று கூறியிருக்கிறது.
2056 ஆம் ஆண்டு சிம்பாப்வே அணியும், 2058 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியும் 20க்கு20 உலக கிண்ணத்தை வெற்றி கொள்ளவுள்ளன.
2060 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவும்,2062 இல் மேற்கிந்திய தீவுகள் அணியும் 2064 மீண்டும் இந்திய அணியும் அந்த கிண்ணத்தை வெற்றி கொள்ளவுள்ளதாக ஏ. ஐ கணித்திருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |