யாழில் விசேட ஆலயங்களில் பக்தர்கள் சூழ மானம்பூத் திருவிழா
யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் பக்தர்கள் சூழ மானம்பூ உற்சவம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதற்கமைய, நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மானம்பூ உற்சவம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று(20.10.2026) காலை இந்த உற்சவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானம்பூ திருவிழா
இதன்போது, காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி வெளிவீதி உலா வந்தது மானம்பூ உற்சவம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், விசேட பூஜையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்துள்ளனர்.




தொல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ஆலயம்
யாழ்ப்பாணம் - தொல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ஆலயத்தின் மானம்பூத் திருவிழா இன்று (20) காலை சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.30 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, வாழை வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, துர்க்காதேவி அம்பாள் உள்வீதியிலும் வெளிவீதியிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
