தாய்லாந்து பிரதிப் பிரதமரின் விஜயம் குறித்து அரசாங்கம் விளக்கம்
தாய்லாந்து நாட்டின் பிரதிப் பிரதமர் சுபஜீ சுதும்புனின் இலங்கை விஜயமானது ஒரு தனிப்பட்ட விஜயம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பௌத்த பக்தர்களுடன் இணைந்து மிஹிந்தலை விகாரையில் நடைபெற்ற வைபவத்தில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டார் என வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
தாய்லாந்து தூதரகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அவரது விஜயத்திற்காக பிரமுகர்களுக்கான ஓய்வறை வசதி மற்றும் பிற உபசரிப்பு வசதிகளை இலங்கை அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.

இந்த விஜயம் முழுக்க முழுக்க ஒரு சமய நிகழ்வில் பங்கேற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட பயணம் என்பதால், பிரதிப் பிரதமருடன் வேறு எந்த அதிகாரிகளும் உடன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளது.
சுபஜீ சுதும்புன் இதற்கு முன்னரும் சமயக் காரியங்களில் ஈடுபடுவதற்காக பலமுறை தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.