போதைப்பொருள் கடத்தலுடன் ஆயுதக் கடத்தலும்.. ஷிரான் பாசிக் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Shadhu Shanker Oct 19, 2026 08:44 PM GMT
Report

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக், போதைப்பொருள் கடத்தலுக்கு மேலதிகமாக சட்டவிரோத ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டிருக்கலாம் என விசாரணைப் பிரிவினருக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைத் தடுத்து வைத்துள்ளதைச் சவாலுக்கு உட்படுத்தி ஷிரான் பாசிக் தாக்கல் செய்த மனு, நேற்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நம்பகமான தகவல்கள் 

நீதியரசர்களான மஹேன் கோபல்லவ மற்றும் ஏ. பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேஷ் ஞானராஜ், ஷிரான் பாசிக்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என நீதிமன்றத்தில் வாதிட்டார்.

போதைப்பொருள் கடத்தலுடன் ஆயுதக் கடத்தலும்.. ஷிரான் பாசிக் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் | Also Related To Arms Smuggling To Shiran Pasik

சர்வதேச பொலிஸாரால் (INTERPOL) வெளியிடப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த போதைப்பொருள் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த அறிவித்தல் நீக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

மேலும், 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் மற்றும் கொக்கேய்ன் கடத்தல் தொடர்பான இரண்டு வழக்குகள் மட்டுமே தற்போது அவருக்கு எதிராக நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்குப் போதுமான சட்டபூர்வமான அடிப்படைகள் இல்லை என்றும் வாதிட்டார்.

வீட்டிலிருந்து உணவு

இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, ஷிரான் பாசிக் சட்டவிரோத ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான நம்பகமான தகவல்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அவர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளாரா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தலுடன் ஆயுதக் கடத்தலும்.. ஷிரான் பாசிக் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் | Also Related To Arms Smuggling To Shiran Pasik

இந்த விசாரணைகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட நியாயமான காரணங்களைக் கருத்திற்கொண்டே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

விசாரணையின்போது, ஷிரான் பாசிக்கிற்கு வீட்டிலிருந்து மரக்கறி உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறும், சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்குத் தற்போது வழங்கப்படும் நேரத்தை அதிகரிக்குமாறும் அவரது தரப்பு கோரிக்கை விடுத்தது.

மேலும், ஷிரான் பாசிக்கும் அவரது சட்டத்தரணிகளுக்கும் இடையிலான உரையாடல்களைப் பொலிஸார் பதிவு செய்வதாகவும் மனுதாரர் தரப்பு குற்றஞ்சாட்டியது.

இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும், சந்தேகநபரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், உணவு மற்றும் சட்டத்தரணிகளைச் சந்திப்பது தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, குறிப்பிட்ட நாளில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதியரசர்கள் குழாம் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.

கொழும்பில் தொடரும் போராட்டம்! ஞானசார தேரர் விவகாரத்தில் வெடிக்கும் அரசியல் சர்ச்சை

கொழும்பில் தொடரும் போராட்டம்! ஞானசார தேரர் விவகாரத்தில் வெடிக்கும் அரசியல் சர்ச்சை

அக்குரணையில் கோர விபத்து! சாரதிக்கு அடுத்தகட்டப் பரிசோதனை - பொலிஸார் வெளியிட்ட தகவல்

அக்குரணையில் கோர விபத்து! சாரதிக்கு அடுத்தகட்டப் பரிசோதனை - பொலிஸார் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US