கொழும்பில் தொடரும் போராட்டம்! ஞானசார தேரர் விவகாரத்தில் வெடிக்கும் அரசியல் சர்ச்சை
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்னால் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் தொடர்ந்தும போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் பௌத்த தேரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதுடன், இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கங்கள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் ஞானசார தேரருக்கு முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் சட்டபூர்வத் தன்மை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் மீண்டும் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார்.
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரும் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
மின்வெட்டுப் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் தற்போதைய பிரச்சினைகளைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தியை அதிகரிக்கவும், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
மேலும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கருத்துகள் இன மற்றும் மத ரீதியான பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், போராட்டங்கள் வன்முறையாக மாறும் அபாயம் எச்சரிக்கபடுகின்றது.
இந்தவிடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு லங்காசிறியின் Newsinsight நிகழ்ச்சியை காண்க...