சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் - பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை
சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று(19.10.2026) இடம்பெற்றுள்ளது.
விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இந்தத் தகவலையடுத்து, விமானம் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
4 மணிநேர விசாரணை
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தப்பட்டதில், வெடிகுண்டு அச்சுறுத்தல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அனைத்துப் பாதுகாப்புப் பணிகளும் முடிக்கப்பட்டு, தாமதத்திற்குப் பின்னர் இரவு 10 மணியளவில் அந்த விமானம் கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் விடுத்தவர் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri