இரண்டு மணிநேரம் வாக்குமூலம்! இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய ஜி.எல். பீரிஸ்
புதிய இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை (20) முன்னிலையான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி, இன்று (20) முன்னிலையாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (20) முன்னிலையாகியுள்ளார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயிலர் 2-வில் கேமியோ.. ஆனால், இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ.. வேற லெவல் கூட்டணி Cineulagam